Posts

நாளமில்லா சுரப்பிகள் நம் உடலின் நாளமில்லா சுரப்பிகள் பலவகையான பணிகளுக்கான அடிப்படைக் காரணிகளாக அமைந்துள்ளன. அவற்றின் பணிகளையும், அமைவிடங்களையும் அறிந்து கொள்ளலாம். நம் உடலுக்குத் தேவையான சுரப்பு நீர்களை வெளிப்படுத்தும் அமைப்பை சுரப்பிகள் என்ற பெயரால் அழைக்கிறோம். நம் உடலில் அமைந்துள்ள சுரப்பிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. நாளமுள்ள சுரப்பிகள் 2. நாளமில்லா சுரப்பிகள் நாளம் என்பது குழலைக் குறிக்கும் சொல்லாகும். குழாய்கள் வழியாக சுரக்கும் அமைப்பைக் கொண்டுள்ள சுரப்பிகள் நாளமுள்ள சுரப்பிகள் என்றும், குழாய்கள் இல்லாமல் நேரடியாக சுரப்பு நீர்களைச் சுரக்கும் சுரப்பிகள் நாளமில்லா சுரப்பிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகளிலும் இரண்டு வகைகள் இருக்கின்றன. 1. வெளிப்புறச் சுரப்பிகள் (Exocrine glands) 2. உட்புற சுரப்பிகள் (Endocrine glands) இவற்றில் வெளிப்புறச் சுரப்பிகள் என்பவை இரத்தம், நிணநீர் தவிர பிற பகுதிகளில் அல்லது உறுப்புகளில் கலக்கும்படியான நீர்களைச் சுரக்கும் சுரப்பிகளைக் குறிக்கின்றன. வாயில் சுரக்கும் உமிழ்நீரும், இரைப்பையில் சுரக்கு