நாளமில்லா சுரப்பிகள்

நம் உடலின் நாளமில்லா சுரப்பிகள் பலவகையான பணிகளுக்கான அடிப்படைக் காரணிகளாக அமைந்துள்ளன. அவற்றின் பணிகளையும், அமைவிடங்களையும் அறிந்து கொள்ளலாம்.

நம் உடலுக்குத் தேவையான சுரப்பு நீர்களை வெளிப்படுத்தும் அமைப்பை சுரப்பிகள் என்ற பெயரால் அழைக்கிறோம். நம் உடலில் அமைந்துள்ள சுரப்பிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. நாளமுள்ள சுரப்பிகள்

2. நாளமில்லா சுரப்பிகள்

நாளம் என்பது குழலைக் குறிக்கும் சொல்லாகும். குழாய்கள் வழியாக சுரக்கும் அமைப்பைக் கொண்டுள்ள சுரப்பிகள் நாளமுள்ள சுரப்பிகள் என்றும், குழாய்கள் இல்லாமல் நேரடியாக சுரப்பு நீர்களைச் சுரக்கும் சுரப்பிகள் நாளமில்லா சுரப்பிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

நாளமில்லா சுரப்பிகளிலும் இரண்டு வகைகள் இருக்கின்றன.

1. வெளிப்புறச் சுரப்பிகள் (Exocrine glands)

2. உட்புற சுரப்பிகள் (Endocrine glands)

இவற்றில் வெளிப்புறச் சுரப்பிகள் என்பவை இரத்தம், நிணநீர் தவிர பிற பகுதிகளில் அல்லது உறுப்புகளில் கலக்கும்படியான நீர்களைச் சுரக்கும் சுரப்பிகளைக் குறிக்கின்றன. வாயில் சுரக்கும் உமிழ்நீரும், இரைப்பையில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலமும் நாளமில்லாத சுரப்பு நீர்கள் தான். ஆனால், அவை நேரடியாக அந்தந்த உறுப்புகளுக்குள் சுரக்கின்றன. இவ்வாறு சுரக்கும் சுரப்பிகளை வெளிப்புறச் சுரப்பிகள் என்று அழைக்கிறார்கள். இவற்றில் கண்ணீரைச் சுரக்கும் கண்களும், வியர்வையைச் சுரக்கும் தோலும் அடக்கம்.

நேரடியாக, இரத்த ஓட்டத்திலோ அல்லது நிணநீரிலோ கலந்து, முழு உடலுக்கும் பயன்படும் விதத்தில் பணியாற்றும் சுரப்பு நீர்கள் ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹார்மோன்களைச் சுரக்கும் சுரப்பிகளை உட்புறச் சுரப்பிகள் என்று அழைக்கிறோம். ஹார்மோன் என்ற கிரேக்கச் சொல்லிற்கு தூண்டும் பொருள் என்று அர்த்தம். தனிச்சிறப்பான தூண்டும் நீரை ஹார்மோன் என்ற சொல்லால் அழைக்கிறோம்.

ஹார்மோன் சுரப்பிகள்

நம் உடலில் நூற்றுக் கணக்கான ஹார்மோன்கள் உடல் இயக்கத்தில் பங்கேற்பதற்காக சுரக்கின்றன. இன்னும் பல ஹார்மோன்கள் கண்டுபிடிக்கப்படவே இல்லை. கண்டுபிடிக்கப் பட்டிருக்கும் சில ஹார்மோன்களின் முழு இயங்கியல் தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இதுவரை ஆய்வாளர்களால் ஓரளவு புரிந்து கொள்ளப்பட்ட சில நாளமில்லாச் சுரப்பிகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

1. பிட்யூட்டரி சுரப்பி

2. தைராய்டு சுரப்பி

3. அட்ரினல் சுரப்பி

4. பால் இனச் சுரப்பிகள்

5. கணையச் சுரப்பி

6. பீனியல் சுரப்பி

7. தைமஸ் சுரப்பி


பிட்யூட்டரி சுரப்பி

பிட்யூட்டரி சுரப்பியானது கபாலக்குழியில் சிறுமூளைக்கு அடியில், கண்களுக்கு நேர் பின்புறமாக அமைந்துள்ளது. இதன் எடை சுமார் 0.5 கிராம் ஆகும். பயறு வடிவத்தில் அமைந்திருக்கும் பிட்யூட்டரி சுரப்பி நாளமில்லா சுரப்பிகளின் தலைவன் என்று அழைக்கப்படுகிறது.

பிட்யூட்டரி சுரப்பி உடலில் அமைந்துள்ல எல்லா சுரப்பிகளையும் தூண்டும் தன்மையோடு அமைந்துள்ளதால் இது சுரப்பிகளின் தலைவன் என்று அழைக்கப்படுகிறது.

பிட்யூட்டரி சுரப்பி அமைப்பு ரீதியாகவும், தன்மை அடிப்படையிலும் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது.

1. சுரப்பியின் முன்பகுதி

2. சுரப்பியின் பின்பகுதி

பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதி சில ஹார்மோன்களையும், பின் பகுதி இன்னும் சில ஹார்மோன்களையும் சுரக்கிறது.

முன்பகுதி சுரப்பியின் ஹார்மோன்கள்

பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதியில் மற்ற சுரப்பிகளைக் கட்டுப்படுத்தும் விதத்திலான ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த வகை ஹார்மோன்களுக்கு ட்ராபிக் ஹார்மோன்கள் என்று பெயர்.

ட்ராபிக் ஹார்மோன்கள் ஐந்து வகைப்படும்.

1. வளர்ச்சி ஹார்மோன்

2. தைராய்டு தூண்டல் ஹார்மோன்

3. அட்ரினல் தூண்டல் ஹார்மோன்

4. பாலினச் சுரப்பி தூண்டல் ஹார்மோன்

5. பால் சுரப்பி தூண்டல் ஹார்மோன்

முழு உடல் வளர்ச்சிக்கும் வளர்ச்சி ஹார்மோன் துணைபுரிகிறது. தைராய்டு தூண்டல் ஹார்மோன் தைராய்டு சுரப்பியைத் தூண்டி, அதன் வேலையை செய்வதற்காகப் பயன்படுகிறது. அட்ரினல் சுரப்பியைத் தூண்டி, அதன் சுரப்புகளை வெளிப்படுத்த உதவுவது – அட்ரினல் தூண்டல் ஹார்மோன் ஆகும். அதே போல, பாலினச் சுரப்பிகளைத் தூண்டும் வேலையை பாலினச் சுரப்பி தூண்டல் ஹார்மோன் செய்கிறது. இது லூட்டினைசிங் ஹார்மோன் மற்றும் ஃபாலிக்கிள் தூண்டல் ஹார்மோன் என இரு வகைப்படும். பால் சுரப்பிகளை பிற ஹார்மோன்களுடன் இணைந்து தூண்டும் வேலையை பால் சுரப்பி தூண்டல் ஹார்மோன் செய்கிறது.

பிட்யூட்டரி சுரப்பியின் முன்பகுதி ஹார்மோன்கள் உடலிற்கு சரிவரக் கிடைக்காத போது உடலின் முழு வளர்ச்சியும் சமச்சீரற்று இருக்கும். அதே போல, தைராய்டு, அட்ரினல், பாலினச் சுரப்பிகள் இவைகளின் பணிகளும் சரிவர நடைபெறாது.

பின்பகுதி சுரப்பியின் ஹார்மோன்கள்

பிட்யூட்டரி சுரப்பியின் பின்பகுதியில் இரண்டு ஹார்மோன்கள் சுரக்கின்றன.

1. ஆக்சிடோசின்

2. வேசோபிரெசின்

Comments

Post a Comment